நெல்லை ஐங்ஷன் பழைய பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தும் பணிக்காக பேருந்து நிலையத்தின் பல பகுதிகள் இன்று முதல் (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மையப் பேருந்து நிலையமாக உள்ளது நெல்லை ஐங்ஷன் பழைய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை ஐங்ஷன் பழைய பேருந்து நிலையத்தில் நவீனமயப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் பேருந்து நிலையத்தின் பல பகுதிகள் புதன் கிழமை மூடப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தின் வெளிப்புறச் சாலைகளில் பேருந்துகள் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் பேருந்து நிலையம் நவீனமயப்படுத்தும் பணிகள் குறித்து அறிவித்திருந்த போதிலும் மக்களுக்கும் , பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு இதை பற்றி தகவல்கள் முழுமையாக சென்று சேரவில்லை.